சிறையில் குழந்தையுடன் இருக்கும் பெண் கைதிகளின் நலன் பாதுகாக்கப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் சிறைத்துறை ஏடிஜிபி தகவல்

சிறைகளில் குழந்தையுடன் இருக் கும் பெண் கைதிகளின் நலன் உரிய முறையில் பாதுகாக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிறைகளில் குழந்தையுடன் இருக்கும் பெண் கைதிகளின் நலன் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந் தது. இந்த வழக்கில் தமிழக சிறைத்துறை ஏடிஜிபி ராஜேந்திரன் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஜனவரி 1-ம் தேதி வரை பெண்கள் சிறையில் 627 பேர் உள்ளனர். இவர்களில் 21 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் இருக்கிறார்கள். வேலூர், திருச்சி, கோவை சிறைகளில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கைதிகள் 12 பேர் உள்ளனர்.

சிறை விதிகளின்படி, பெண் கைதிகள் தங்களின் குழந்தை களை 6 வயது வரை தங்க ளுடன் வைத்துக் கொள்ள அனு மதிக்கப்படுகிறது. 6 வயதுக்கு மேல் அவர்களது உறவினர்களிடம் பாதுகாப்பாக அனுப்பிவிடுவோம். சிறையில் தாயுடன் இருக்கும் குழந்தைகள் குற்றவாளியாகவோ, விசாரணை கைதியாகவோ நடத்தப் படுவதில்லை. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலான நேரம் தவிர, மற்ற நேரங்களில் குழந்தைகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கிறோம். குழந்தை மற்றும் பெண் கைதிகளுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படுகிறது. அவர்களின் நலன் உரிய முறை யில் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

“பெண்கள் சிறையில் குழந்தை யுடன் இருக்கும் பெண்களின் நலன் குறித்த அரசின் நிலைப்பாடும், தங்களது ஆய்வின்போது கிடைத்த தகவல்களும் ஒன்றுபோல இருப்ப தாக தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரி வித்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக வழக்கறிஞர் சுரேஷ் நியமிக்கப் படுகிறார். வழக்கு விசாரணை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்