‘ஊரார் வரைந்த ஓவியம்’ புத்தக விவகாரம்: ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி அருகிலுள்ள குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் து.குணசேக ரன். இவர் துரை.குணா என்ற பெயரில் எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு ஜூலை 12-ல் வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகத்தில் குளந்திரான் பட்டு கிராமத்திலுள்ள பெண்கள் மற்றும் அங்குள்ள கலாச்சாரத்தை இழிவு படுத்தி எழுதப்பட்டுள்ளதாகக் கூறி, புத்தகத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இது குறித்து அவ்வப்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக கறம்பக்குடி காவல் நிலையத்தில் புத்தகம் எழுதிய குணசேகரன் தரப்பில் 3 பேர் மீதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த வி. தங்க ராசு உள்ளிட்ட 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், பிரச்சினை தீராததால் அந்தக் கிராமத்தில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இதனால், இச்சம்பவம் குறித்து விசா ரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசனுக்கு கறம்பக்குடி காவல் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்