கும்பகோணத்தில் தனியார் பொறியியல் கல்லூரியை ரூ.150 கோடிக்கு விற்க முயற்சிள்: போலி ஆவணங்களுடன் 2 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியை, போலி ஆவணங் கள் மூலம் ரூ.150 கோடிக்கு விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தொழிலதிபர் திருநாவுக்கரசு என்பவருக்குச் சொந்தமான தனியார் பொறியியல் கல்லூரி கடந்த 15 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு கும்பல் போலி ஆவணங்கள் மூலம் ரூ.150 கோடிக்கு கல்லூரியை விற்பனை செய்ய முயற்சி செய்ததாக, கல்லூரி உரிமையாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் முருகன் ஆகியோர் கும்பகோணம் டிஎஸ்பி கணேசமூர்த்தியிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக, கும்ப கோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்மோகன் தலை மையிலான தனிப்படை போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கும்ப கோணத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள ஒரு கும்பல், கல்லூரியை விற்பனை செய்ய பேரம் பேசுவ தாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.

போலீஸார் ஏற்பாட்டின்படி, தனியார் விடுதிக்கு நேற்று சென்ற சிலர், கல்லூரியை வாங்க விரும்புவதுபோல பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, அந்தக் கும்பல் போலி ஆவணங்களைக் காண் பித்து, ரூ.150 கோடிக்கு பேரம் பேசியுள்ளது. இதையடுத்து, போலீஸார் அந்தக் கும்பலைச் சேர்ந்த 2 பேரைக் கைது செய்தனர். போலி ஆவணங் களும் பறிமுதல் செய்யப் பட்டன.

விசாரணையில், அவர்கள் நாச்சியார்கோவில் மேல மடவிளாகத்தைச் சேர்ந்த பத்திர விற்பனையாளர் வேலா யுதம்(59), மேலானமேடு பகுதி யைச் சேர்ந்த முத்துபழனி வேலு(60) என்பது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸார், தலைமறை வாக உள்ள கும்பகோணம் காம ராஜர் நகரைச் சேர்ந்த அசோக் குமார், புகழேந்தி ஆகியோரைத் தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்