சுகாதாரத்துறை மூத்த அதிகாரி கடலில் குதித்து தற்கொலை: காரணம் என்ன என்பது குறித்து போலீஸ் விசாரணை

By செய்திப்பிரிவு

சுகாதாரத்துறை மூத்த அதிகாரி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுகாதாரத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் சுந்தராபுரம் ராஜாமுத்தையாபுரத்தைச் சேர்ந்த வர் டாக்டர் அறிவொளி (54). சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (டிஎம்எஸ்) கட்டுப்பாட்டில் உள்ள காசநோய் கட்டுப்பாடு திட்டத்தில் கூடுதல் இயக்குநராக பணி புரிந்து வந்தார். டிஎம்எஸ் அலு வலக வளாகத்திலேயே தங்கியிருந் தார். இவருடைய குடும்பத்தினர் கோவையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொள் வதற்காக ஆட்டோவில் சென்ற அவர், சென்னை சாந்தோம் ஆல யத்தின் பின்புறம் உள்ள டுமீல் குப்பம் கடற்கரையில் இறங்கி யுள்ளார். நடைப்பயிற்சிக்கு சென்றவர் அலுவலகத்துக்கு வராததால், அவரது குடும்பத்தினர் மற்றும் சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அலுவலகத் தில் இருந்து தகவல் தெரிவிக்கப் பட்டது. மேலும் போலீஸாரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெரினா கடற் கரை காந்தி சிலையின் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்த பொதுமக்கள், மெரினா போலீஸாருக்கு தகவல் கொடுத்த னர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சடலத்தை கைப் பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணையை தொடங்கினர். போலீஸா ரின் முதல் கட்ட விசாரணையில், கரை ஒதுங்கிய உடல் அறிவொளி தான் என்பது தெரியவந்தது. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மிகவும் சிரமப்பட்டு வந்துள் ளார். அவரது தற்கொலைக்கு காரணம் புற்றுநோயின் பாதிப்பா? அல்லது பணிச்சுமையா? என்று போலீஸார் விசாரித்து வரு கின்றனர்.

அறிவொளியின் மகன் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்