620 தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டபோது, சில உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. அவற்றில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பிறகும், தற்காலிக தினக்கூலிகளாகவே உள்ளனர்.

துப்புரவு ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள், மின் பணியாளர்கள் என 908 பேர் தற்காலிக தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்களை நிரந்தரம் செய்வது குறித்து சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தற்காலிக தினக்கூலி தொழிலாளர்களை நிரந்தரம் செய்யுமாறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றன. எனவே, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அந்த ஊழியர்களைப் பற்றிய விவரங்கள் பெறப்பட்டு, அவர்களை நிரந்தரம் செய்ய அனுமதி வேண்டி தமிழக அரசுக்கு எழுதப்படவுள்ளது.

தற்காலிக தினக்கூலிகளாக இருந்த 908 பேரில் சிலர் சென்னை குடிநீர் வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். சிலர் நீண்ட காலமாக பணிக்கு வரவில்லை. இவர்கள் போக மீதமுள்ள 453 பேர் மற்றும் ஆட்சியர்கள் பட்டியலில் விடுபட்டிருந்த 167 பேர் என மொத்தம் 620 பேரை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்