வாக்காளர் பட்டியல்: 32,107 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்காகப் பெறப்பட்டவைகளில் 32,107 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான மார்ச் 5-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவ்வாறு 1,40,439 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 32,107 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 1,08,332 விண்ணப் பங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.

இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரி சீலனை செய்யப்பட்டன. அதில் முறையாக பூர்த்திசெய்யப் படாதது, உரிய ஆவணங்கள் இணைக்கப்படாதது போன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ள 32,107 விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டு, அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், புகைப்பட வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். தேர்தலுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது சாத்தியமில்லை. அதனால், அவர்களுக்கு வழங்கப் படும் வாக்குச்சாவடி அனுமதி சீட்டைக்கொண்டு, தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ள புகைப்படத்துடன் கூடிய ஆவணங்களுடன் வந்து வாக்களிக்கலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்