நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தலைமைகள் கூட்டணிக் கணக்கில் மூழ்கியிருக்கக் கட்சியினர் தங்களை வேட்பாளர்களாக்க மும்முரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த பல காலங்களாக எம்.பி. வேட்பாளர்கள் நீலகிரிக்கு இறக்கு மதியாகி உள்ளனர். நீலகிரியின் மண்ணின் மைந்தர் மாஸ்டர் மாதன் மட்டுமே பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றார். இம்முறை நீலகிரிக்கு உட்பட்ட வேட்பாளரை களமிறக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
நீலகிரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஆ.ராசா, மீண்டும் நீலகிரியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக.வின் செல்வாக்கால்தான் அவரை எதிர்க்க பயன்படும் என்பதால் இம்முறை கூட்டணி கட்சிக்கு நீலகிரியை தாரை வார்க்காமல் அதிமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளது.
தற்போது வேட்பாளர்களை முடிவு செய்யும் படலத்தில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளது.
நீலகிரி தனித்தொகுதி என்ப தால் மாவட்டச் செயலாளர் கலைச் செல்வன், குன்னூர் நகராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணன், உதகை நகராட்சித் தலைவர் சத்யபாமா, முன்னாள் எம்.பி. தியாகராஜன் ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களின் மனுக்களை பரிசீலித்து வரும் தலைமை விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ள வர்களை நேர்காணல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மாவட்டச் செயலாளரான கலைச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், குன்னூர் நகராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு நேர் காணல் அழைப்பு வந்ததால், அவர் தலைமையிடம் சென்றுள்ளார்.
“குன்னூர் நகராட்சித் தலைவர் கோபாலகிருஷ்ணனுக்கு கட்சியில் முக்கியத்துவமோ, நல்ல பெயரோ இல்லை. நகராட்சியில் பல முறைகேடுகள் நடந்து வருவதால் குன்னூர் மக்களிடையே அவருக்கு செல்வாக்கு இல்லை என்றும் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் எதிரணியினர் எளிதாக வெற்றி பெற்று விடுவார்கள் எனவும் கூடவே தகவல்களும் சென்னை அனுப்பப்பட்டுள்ளன” என்று அதிமுகவினரே தெரிவிக்கின்றனர்.
இதனால் தலைமை யோ சனையில் மூழ்கியுள்ளதால் விருப்ப மனு சமர்ப்பித்த மற்றவர்களுக்கு நேர்காணல் ஜுரம் தொற்றிவிட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago