தமிழக சிறைகளில் உள்ள 14 ஆயிரம் தண்டனைக் கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக அவர்களது விவரங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
நாடு முழுவதும் யுஐடிஏஐ (இந்திய ஒருங்கிணைந்த அடை யாள அட்டைகள் ஆணையம்) சார்பில் ஆதார் அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) முறையுடன் இணைந்து ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அம்முறையில் இதுவரை 4.73 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளுக்கு யூஐடிஏஐ மூலம் ஆதார் அட்டை வழங்க பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தமிழக சிறைகளில் உள்ள கைதிகளிடம் ஆதார் அட்டைக்கான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இது குறித்து தமிழக சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் உள்ள 13 சிறைகளில் 14 ஆயிரம் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க விவரங்களை பதிவு செய்யும் பணியை யூஐடிஏஐ செய்து வருகிறது’’ என்றார்.
இது குறித்து யூஐடிஏஐ துணை இயக்குநர் கே.திருமால் கூறியதாவது:
மத்திய அரசு உத்தரவின்படி தமிழகத்தில் உள்ள புழல், வேலூர், மதுரை, திருச்சி, கோவை, சேலம், பாளையங்கோட்டை உள்ளிட்ட 13 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனைக் கைதிகளுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்காக அவர்களது விவரங்களை பதிவு செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். 1,500 கைதிகள் ஏற்கெனவே ஆதார் அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள கைதிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 4 ஆயிரம் கைதிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆதார் வழங்குவதில் என்பிஆர் முறையை தமிழகம் பின்பற்றுகிறது. ஆனால், கைதிகளுக்கு யூஐடிஏஐ முறையில் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதால், அது தொடர்பாக தமிழக அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று விவரங்களை பதிவு செய்து வருகிறோம். யூஐடிஏஐ முறையில் ஆதார் அட்டை விவரங்களை பதிவு செய்ய, மத்திய அரசு அனுமதித்துள்ள 33 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று தேவை.
அதன் அடிப்படையில் சிறை பதிவேட்டில் உள்ள விவரங்களின்படி அரசு உயர் அதிகாரிகள் அளிக்கும் சான்றொப்பத்தைக் கொண்டு கைதிகளின் ஆதார் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago