ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு: திமுக, பு.த., மார்க்சிஸ்ட். கம்யூ. கட்சிகள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரையைப் புறக்கணித்து திமுக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. அண்மயில் நடைபெற்ற ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பணபலம் வெற்றி பெற்றுள்ளது" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் கூறும்போது, "தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது. பாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அரசு சரியாக செயல்படவில்லை" என்றார்.

புதிய தமிழக கட்சி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, "தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. இங்கே நடைபெறும் கொலை வழக்குகளில் சரியான விசாரணை மேற்கொள்ளப்படுவதில்லை. கவுரவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஆளுநர் அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார்" என்றார்.

முன்னதாக பேரவையில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ரோசய்யா, "தமிழகத்தில் மதநல்லிணக்கம் பேணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது. இதற்கு எனது பாராட்டுகள்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்