18-வது நாளாக வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

வனத்துறை பணியிடங்களை முழுமையாக வனக்கல்லூரி மாணவர்களுக்கே ஒதுக்கவேண் டும் என வலியுறுத்தி, மேட்டுப் பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 சதவீத இட ஒதுக்கீட்டை 25 சதவீதமாக குறைத் ததைத் கண்டித்து இப்போராட்டம் நடக்கிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இதுதொடர்பான வழக்கு முடிந்தவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வேளாண் மற்றும் வனத் துறை அமைச்சர்கள் வாக்குறுதி கொடுத்ததால் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

இந்த நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 18 நாட்களாக கல்லூரி வளாகத்திலேயே தினமும் ஒரு நூதனப் போராட்டத்தை நடத்தி வரும் மாணவர்கள், நேற்று முன்தினம் தீவட்டி ஏந்தியும், நேற்று கூண்டுகளுக்குள் அடைந்து கொண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

போராட்டம் குறித்து மாணவர் கள் கூறும்போது, ‘100 சதவீத இடஒதுக்கீடு என்று கல்லூரியில் சேரும்போது அளிக்கப்பட்ட கல்லூரி விவரக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, 100 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்துவோம்; போராட்டத்தை கைவிடுங்கள் என்று அமைச்சர்கள்தான் வாக் குறுதி தந்தனர். ஆனால், வாக் குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE