மார்ச் 3-ம் தேதி வேலைநிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் மார்ச் 3-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங் களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதற்கான கூட்டம் கடந்த 11-ம் தேதி நடந்தது. இதில் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படாததால் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக பல்லவன் இல்லத்தில் கடந்த 11-ம் தேதி மாலை தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

பிப். 14-ம் தேதி போக்குவரத்து கழகங்களின் மண்டல அலுவலகங்களின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வும், 16-ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று மாலை சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தொமுச பொதுச்செயலாளர் மு. சண்முகம் கூறும்போது, “ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காவிட் டால் மார்ச் 3-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எனவே பேச்சுவார்த்தை தேதி விரைவில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்