உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் நிலை தொடர்பாக வழக்கறிஞர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் வசதியை மேலும் விஸ்தரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களின் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் வசதி, உயர் நீதிமன்ற கிளையில் ஏப். 2 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியில் தற்போது மூன்றுவிதமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு முதலில் எஸ்.ஆர். எண் வழங்கப்படும். பரிசீலனைக்குப் பிறகு மெயின் எண் அளிக்கப்படும். எஸ்.ஆர். எண் நிலையில், மனுவுக்கான எஸ்.ஆர். எண், மனு தாக்கல் செய்யப்பட்ட நாள், வழக்கறிஞர் பெயர் ஆகியன செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும்.
எஸ்.ஆர். எண் வழங்கிய பின், மனுக்கள் சில கேள்விகளால் திரும்ப அனுப்பப்பட்டால், மனு திரும்ப அனுப்பிய நாள், விளக்கம் பெறப்பட்டு மனு மீண்டும் ஆய்வுக்கு எடுக்கப்பட்ட நாள் ஆகிய விபரங்கள் கூடுதலாக அளிக்கப்படும். மெயின் எண் வழங்கும் நிலையில், மனுவின் மெயின் எண், எண் வழங்கிய விபரங்கள் கூடுதலாக அளிக்கப்படும். இந்த வசதியால் வழக்கறிஞர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வசதியை மேலும் விரிவுபடுத்த உயர் நீதிமன்ற பதிவுத் துறை முடிவு செய்துள்ளது. மனு விசாரணைக்கு எடுக்கப்படும் விவரம். விசாரணைப் பட்டியலில் சேர்க்கப்பட்ட விவரம், மனு விசாரணைக்கு வரும் நீதிமன்ற எண், எதிர்மனுதாரர்களின் வக்காலத்து விவரங்கள், மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட நாள், விசாரணைக்கு பின் மனு மீது நீதிமன்றம் பிற்பித்த உத்தரவு விவரம், உத்தரவு நகல் கேட்டு விண்ணப்பித்தது தொடர்பான விவரங்கள், எப்போது உத்தரவு நகல் கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வசதிக்காக வழக்கறிஞர் கள் மனுத் தாக்கல் செய்யும்போது தவறாமல் தங்களின் செல்போன் எண்களைக் குறிப்பிடுமாறும், இந்த வசதியை சிறப்பாக செய்வதற்கு வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் உயர் நீதிமன்ற பதிவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago