தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு: காலதாமதம் செய்ததற்காக விஜயகாந்த் வழக்கு செலவை செலுத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகி யோர் பொதுக் கூட்டங்களிலும், அறிக்கை மூலமும் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதேபோல், அக்கட்சி யைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பார்த்தசாரதி உள்ளிட்டவர் களும் விமர்சனம் செய்தனர்.

எனவே அவர்கள் மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஆகியோர் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்தனர். இவ்வழக்குகள் தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில், தங்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சார்பில் அரசு வக்கீல்கள் அவதூறு வழக்குகளை தாக்கல் செய்ய வழிவகை செய்யும் குற்றவியல் விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த், பிரேமலதா உட்பட 3 எம்எல்ஏக்கள் சார்பில் 12 வழக்குகள் தொடரப்பட்டன.

விஜயகாந்த் உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான முதல் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி இது தொடர்பான ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளதால், இந்த 12 வழக்குகளையும் உச்ச நீதிமன்றத் துக்கு எடுத்துச்செல்ல விரும்பு கிறோம்” என்று தெரிவித்தனர்.

இதை ஏற்ற நீதிபதிகள், இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜயகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `இந்த 12 வழக்குகளில் சில தமிழ் ஆவணங் கள் உள்ளன. இவற்றை ஆங்கிலத் தில் மொழிபெயர்க்க வேண்டி யுள்ளதால், இவ்வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற ஒரு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

இதற்கு நீதிபதிகள், `ஏற் கெனவே, உங்களுக்கு அனுமதி வழங்கி பல நாட்களாகிவிட்டன. ஆனால், இதுவரை வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்குமாற்ற வில்லை.

இதன் மூலம், இந்த நீதிமன்றத் தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. எனவே, இந்த 12 வழக்குகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக் கின்றோம். இந்த அபராதத் தொகையை மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் செலுத்த வேண்டும். மேலும், 15 நாட்களுக்குள் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்லாவிட்டால், 12 மனுக் களையும் தள்ளுபடி செய்துவிடு வோம்’ என்று உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்