‘பொதுத் தேர்தல் 2014’ என்ற தலைப்பிலான தேர்தல் கையேட்டின் தமிழ் பதிப்பு சென்னையில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுத் தேர்தல் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய, ’பொது தேர்தல் 2014’ என்ற தேர்தல் கையேட்டை, இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தொகுத்துள்ளது.
இதன் ஆங்கிலப் பதிப்பு தில்லியில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அதன் தமிழ் பதிப்பு சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் எம்.வி.எஸ். பிரசாத் தலைமையில் நடந்த இந்த விழாவில், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் கே.எம்.ரவீந்திரன் கையேட்டின் தமிழ் பதிப்பை வெளியிட, தமிழக இணை தலைமைத் தேர்தல் அதிகாரி சிவஞானம் (தேர்தல் விழிப்புணர்வு பிரிவு) பெற்றுக்கொண்டார்.
இந்த கையேட்டில் இதுவரை நடந்த அனைத்து பொதுத் தேர்தல்களையும் பற்றிய புள்ளி விவரங்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பற்றிய செய்திகள், சமூக இணைய தள விதிமுறைகள், தேர்தல் நடத்தை கோட்பாடுகள், நோட்டா பட்டன் மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கைச் சரிபார்க்கும் காகித சோதனை முறை உள்ளிட்டவை குறித்து 340 பக்கங்களில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago