விமர்சனத்துக்கு உள்ளாகும் மாநகராட்சி வரிவசூல் நடைமுறைகள்: பணிச்சுமை அதிகரித்ததே காரணம் என பணியாளர்கள் புகார்

சென்னை மாநகராட்சியில் வரி நிலுவையை வசூலிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடை முறைகள் தொடர்ந்து விமர்சனத் துக்கு உள்ளாகின்றன. குறைந்த அளவிலான பணியாளர்கள் இருப்பதே இதற்குக் காரணம் என்கின்றனர் பணியாளர்கள்.

சென்னை மாநகராட்சி கடந்த சில நாட்களாக வரி வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வரி செலுத்தாத நிறுவனங்களின் முன் குப்பை கொட்டுவது, திருநங்கைகளை பயன்படுத்துவது என்று வசூலுக்காக பயன்படுத்தப்படும் வழிமுறைகள் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகின்றன. வரி நிலுவைத் தொகையை எப்படியாவது வசூலிக்க வேண்டுமென்ற உயர் அதிகாரிகளின் நெருக்குதல் தான் இதற்கு காரணம் என்று மாநகராட்சிப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2011-ம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் பரப்பளவு 176 சதுர கிலோ மீட்டரில் இருந்து 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கப்பட்டது. இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை சுமார் 5 லட்சத்திலிருந்து 11 லட்சமாக அதிகரித்தது. ஆனால், வரி வசூல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. தற்போது 250 வரி வசூலிக்கும் அலுவலர்கள், 100 உரிம ஆய்வாளர்கள், 80 கணக்கீட்டாளர்கள் உள்ளனர். இவ்வளவு குறைவான பணியாளர் களை வைத்துக் கொண்டு, வரித் தொகையை முழுமையாக வசூலிப்பது சாத்தியமற்றதாகும்.

இணையதளம் மூலமும், வங்கிகளின் மூலமும் வரி செலுத்தும் வசதி இருந்தாலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாக வரி செலுத்துவோர் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. சென்னை யில் 10 சதவீதத்துக்கும் குறை வானவர்களே இணையதளம், வங்கிகளின் மூலம் வரி செலுத்து கின்றனர். இந்நிலையில் எப்படி யாவது வரியை வசூல் செய்து விட வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பது நியாயமில்லை என்கின்றனர் பணியாளர்கள்.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அலுவலர் கூறும் போது, “ஒரு துணை வருவாய் அலுவலர் 3000 சதுர அடி கொண்ட சொத்துகளுக்கான வரியை மட்டும்தான் கணக்கிட முடியும், 3000 - 5000 சதுர அடி வரையிலான சொத்துகளை மண்டல அலுவலர் கணக்கிட வேண்டும். 5000 - 50000 சதுர அடி வரையில் வருவாய் அலுவலர், 50000 சதுர அடிக்கும் அதிகமாக இருந்தால் இணை ஆணையர் கணக்கிட வேண்டும். தொடர்ந்து வளர்ந்துகொண்டும், மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண் டும் இருப்பதால் அனைவருக்கும் பணிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன” என்றார்.

இதுகுறித்து சென்னை மாநக ராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவிக்கும் போது, “சென்னை மாநகராட்சியில் வருவாய்த்துறை பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது போல் தோன்றுகிறது. ஏனென்றால், நேரடியாக வரி வசூலிப்பவர்களிடம் வரி செலுத்து பவர்கள்தான் அதிகம். ஆனால், பொது மக்களை ஆன்லைன் மூலம் வரி செலுத்த ஊக்குவிக்க வேண்டும். ஒரு புறம் மின் ஆளுகை (e-governance) திட்டத்தை பேசிக் கொண்டு, மறுபுறம் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்