ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களுடன் 2-ம் தேதி பேச்சுவார்த்தை: 42 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 42 தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1.43 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த, தமிழக அரசு சார்பில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் முதல் கூட்டம், கடந்த 11-ம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் நடந்தது. அப்போது, தொழிற்சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன. ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை.

இதனால் அதிருப்தியடைந்த தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் மார்ச் 3-ம் தேதி மீண்டும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து மார்ச் 2-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவெடுத்தது.

இந்நிலையில் தொழிற்சங்கங் களிடம் பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்கள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், அரசு அமைத்த குழுவினர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய ஒப்பந்தம் போடுவதால் ஏற்படும் கூடுதல் செலவு பற்றி யும் இதை எவ்வாறு ஈடுசெய்வது என்பது பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் திட்டமிட்டபடி 2-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தப்படும்” என்றனர்.

இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு முறை யும் போராட்டம் அறிவித்தால் தான், அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு எடுக்கிறது. மார்ச் 3-ம் தேதி வேலைநிறுத்தம் என தொழிற் சங்கங்கள் அறிவித்த பிறகுதான், மார்ச் 2-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என அரசு அறிவித் துள்ளது. எனவே, பேச்சுவார்த்தை தொடங்கி, தொழிலாளர்களின் கோரிக்கை களை ஏற்காவிட்டால் திட்டமிட்டபடி மார்ச் 3-ம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்