கடந்த ஓராண்டில் 131 மீனவர்கள் மீட்பு: ஏடிஜிபி தகவல்

கடந்த ஓராண்டில் கடலில் ஆபத்தில் சிக்கிய 131 மீனவர்களும், அவர்களது 31 படகுகளும் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படை ஏடிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோரப் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வந்த ஏடிஜிபி சைலேந்திர பாபு, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரையில் உள்ள இந்திய கடற்படையின் கண்காணிப்புத் தளங்களுக்குச் சென்று, கடலோரப் பாதுகாப்பு தொடர்பாக கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு கடலோரக் காவல் படை மிகுந்த விழிப் புணர்வுடன் பணியாற்றுகிறது. கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றும் பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். கடந்த ஓராண்டில் கடலில் ஆபத்தில் சிக்கிய 131 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது 31 படகுகளையும் மீட்டுள்ளோம். மீனவர்கள் எந்த நேரத்திலும் 1093 என்ற உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம். கடலோரக் காவல் படை உதவக் காத்திருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்