மேலும் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி

2015-16 கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழக மாணவர்கள் பங்கேற்க மடிகணினி ஒரு இன்றியமையாத கல்விச் சாதனமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு மடிகணினிகளை வழங்கி வருகிறது.

2011-12 கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட் டத்தில் 2013-14 கல்வியாண்டு வரை ரூ.2 ஆயிரத்து 781 கோடியே 75 லட்சம் செல வில் 21 லட்சத்து 15 ஆயிரம் மடிகணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நடப்பு கல்வியாண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் மடிகணினிகள் வழங்கவும், அடுத்த கல்வியாண்டில் 5 லட்சத்து 50 ஆயிரம் மடிகணினிகள் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடப்பாண்டில் வழங்குவதற்கான மடிகணினிகளை கொள்முதல் செய்ய அரசு ரூ.1100 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான கொள்முதல் பணி தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்