போக்குவரத்து நெரிசலால் கடும் அவதி: கிடப்பில் போடப்பட்டிருக்கும் மேம்பால திட்ட பணிகள் - உங்கள் குரலில் பொதுமக்கள் புகார்

கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தமிழக அரசு அறிவித்த பல்வேறு மேம்பால திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ‘தி இந்து’வின் உங்கள் குரலில் வாசகர் எஸ்.கோவிந்தன் கூறியிருப்பதாவது:

கிழக்கு கடற்கரை சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அதிகரித்துள்ளதால், மக்கள் குடியேறுவதும் அதிகரித் துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் இருந்தும் இங்கு வந்து பணியாற்றிவிட்டு செல் கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு மேம்பால திட்டங்களை அறிவித்தது.

குறிப்பாக கடந்த ஆட்சியில் எஸ்ஆர்பி டூல்ஸ்-ல் இருந்து தரமணிக்கும், திருவான்மியூரில் சிக்னலில் இருந்து பஸ் டெப்போ வரையிலும் மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டங்களுக்கு மண் பரிசோதனை பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. அதன் பிறகு, திட்டப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, திட்டப் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அரசு அறிவித்த திட்டப்பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மண் பரிசோதனை முடிக்கப்பட்டு, மேம்பாலங்கள் கட்ட வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பின்னர் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்