மீன்பிடித் துறைக்கு தனி அமைச்சகம் வருமா?

தமிழக மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க மீன்பிடித் துறைக்கு என்று தனி அமைச் சகத்தை மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம் என்று ராமேசுவரம் மீனவர் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் 23-ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் வரும் 26-ம் தேதியும், 28-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன.

இந்த பட்ஜெட்டில் மீனவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ராமேசுவரம் மீனவர்களின் பிரநிதி ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

இந்தியாவின் 13 மாநிலங்களில், பல கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரையையொட்டி மூன்று கோடி மீனவர்கள் வசிக்கின்றனர். உலகின் மீன் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

2013-2014-ம் ஆண்டில் கடல்சார் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மூலம் இந்தியா ரூ.18,856 கோடி அந்நியச் செலாவணி ஈட்டியது. தமிழக மீனவர்களின் பிரச்சினை களையும், அதிக ஏற்றுமதிக்கான சாத்தியங்களும், கடற்பரப்பில் மீனவர்களுக்கான பாதுகாப்புக் குறைபாடுகளும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கான பல்வேறு சவால்களும் இருக்கும் நிலையில், இவற்றைத் தீர்க்க மீன்பிடித் துறைக்கு என்று தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டியது அவசியம். இதற்கான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம் என்றார்.

ராமநாதபுரம் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் மாநிலத் துணைச் பொதுச்செயலர் செந்தில்வேல் கூறியதாவது:

பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு தொடக்க விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ம் தேதி நடைபெற்றது.

அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பேசும்போது, ‘‘ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் தினசரி ரயிலை இயக்க வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலிலும் மீன்களைக் கொண்டுச் செல்ல பிரத்யேக ஐஸ் பெட்டி வசதி செய்து தர வேண்டும். பாம்பன் ரயில் பாலத்தை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை களை ரயில்வே பட்ஜெட்டில் நிறைவேற்ற வேண்டும்.

ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் வசிக்கும் 125 கோடி மக்களும் வாழ்வில் ஒரு முறையாவது ராமேசுவரம் வந்து செல்ல வேண்டும் என்று விரும்பு கின்றனர்.

எனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் ராமேசு வரம் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்’ என்றார்.

பிரதமர் மோடி கூறியபடி ராமேசு வரத்தை சுற்றுலாத் தலமாக அறிவித்து அதற்கான நிதியையும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், உணவகம் நடத்துபவர்கள் உள்பட அனைவரும் பிழைக்க வழி பிறக்கும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்