கேரளத்தில் வாக்களித்து விட்டு தமிழகத்திலும் வாக்களிப்பதைத் தடுக்க தேர்தல் துறை திட்டம்:வாக்காளர் பட்டியலை கேட்டுள்ளது

கேரளாவில் தேர்தல் வெள்ளிக்கிழமை முடிந்ததையடுத்து, இரு மாநில எல்லையில் வசிப்பவர்கள் தமிழகத்தில் மீண்டும் ஓட்டு போடுவதைத் தடுக்க தேர்தல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக கேரள வாக்காளர் பட்டியலைத் தரக் கேட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தில் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளம் ஆகிய இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகள் நெடுகிலும் உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் சிலர், கடந்த காலங்களில் இங்கும் அங்கும் மாறி, மாறி ஓட்டு போட்டதாக புகார்கள் எழுந்தன. பல ஆயிரம் பேர் இரு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க இன்னும் 8 நாட்கள் உள்ளன. எனவே அழியாத மை வைக்கப்பட்டாலும், தமிழகத்தில் மீண்டும் வாக்களிக்க முடியும் என்பதால், சில அரசியல் கட்சியினர் இதை தவறாக பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக புகார் எழுந் துள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் கேட்டபோது, “இந்த புகார் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அதனால் இரு மாநிலங்களின் எல்லைப்புறங்களில் உள்ள வாக்குச் சாவடிகளின் கீழ் வரும் வாக்காளர்கள் பற்றிய விவரங் களை ஏற்கெனவே சரிபார்த்துள் ளோம். இது தவிர, கேரளத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் அவர்களும், அம்மாநிலத்தின் வாக்காளர் பட்டியலை அனுப்புவ தாகக் கூறியிருக் கிறார்கள். அது கைக்குக் கிடைக்கப் பெற்றதும், அதை வைத்து நமது வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி நடக்கும். தவறுகள் தடுத்து நிறுத்தப்படும்” என்று பிரவீண்குமார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE