ஓசூர் அருகே நடந்த ரயில் விபத்து: உயிரிழப்புகள் அதிகம் நடந்த பெட்டியின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய முடிவு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடந்த ரயில் விபத்து குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிரி ழப்புகள் அதிகம் நடந்த பெட்டியின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஆனைக்கல் அருகே பிதிரகெரே என்னுமிடத்தில் கடந்த 13-ம் தேதி பெங்களூரு - எர்ணாகுளம் இண்டர்சிட்டி எக்ஸ் பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பேர் பலியானார்கள். 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் 400 மீட்டர் தூரத்துக்கு புதிய தண்ட வாளம் அமைக்கப்பட்டது.

மேலும், விபத்தில் சீர்குலைந்த டி-8 பெட்டி உட்பட அனைத்து பெட்டிகளும் தண்டவாளத்தின் அருகில் வைக்கப்பட்டது. பரா மரிப்பு பணிகள் நடப்பதால் விபத்து நடந்த பகுதியில் ரயில்கள் 20 கி.மீ. வேகத்தில் இயக்க அறிவுறுத்தப் பட்டது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து ரயில்வே உயர்மட்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. தண்ட வாளத்தில் பாறை உருண்ட தாலும், தண்டவாளம் பராமரிப்பு இன்மையாலும் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூர் ரயில்வே ஆணையர் ஏ.கே.மிட்டல் தலைமையில் அதிகாரிகள் விபத்து நடந்த பகுதி யில் ஆய்வு செய்தனர். அப்போது 9 பேர் உயிரிழந்த டி-8 பெட்டியை முழுமையாக ஆய்வு மேற் கொண்டு, தடயங்களை சேகரித் தனர். விபத்துக்குள்ளான பெட்டி கள் ராட்சத கிரேன்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டன. விபத்து குறித்து ரயில்வே அதிகாரிகள் சிலர்கூறியதாவது:

விபத்தில் பெரிய அளவில் சேதமடைந்த டி-8 பெட்டி கடந்த 1993-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும். 22 ஆண்டுகள் ஆன இப்பெட்டி உறுதித்தன்மை இழந்திருக்கலாம். இதன் காரணமாக இப்பெட்டியில் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டி ருக்கலாம்.

மற்ற பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதியபோதும், அதில் பயணம் செய்தவர்களுக்கு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது குறித்து முழுமையாக அறிந்து கொள்ள டி-8 பெட்டி கிராஸ் செக்ஷன் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்ப உள்ளோம். அதன் முடிவில் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்