பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியில் பாமக இணையும் என பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில்: "புதிய கட்சிகள் எங்கள் கட்சியில் இணைவதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருகிறது. எங்கள் கூட்டணி தமிழகத்தில் முதல்நிலை கூட்டணியாக திகழும்" என்றார்.
நம்பிக்கை:
பா.ம.க. உங்கள் கூட்டணியில் சேராது என்பது போல அந்த கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறி இருக்கிறாரே? என நிருபர் எழுப்பிய கேள்விக்கு ஜி.கே.மணி, பாமக, பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிலை என்று கூறவில்லை என பதிலளித்தார். நாளைக்குள் கூட்டணி பற்றி நல்ல முடிவு தெரியும் என்றும் தெரிவித்தார்.
மோடி வருகை:
8-ஆம் தேதி சென்னை வரும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் இடம்பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.
இருப்பினும் அந்த கூட்டத்திற்குப் பின்னரும் கூட்டணியில் வேறு சில கட்சிகள் வந்து சேரலாம் என்றார்.
மறுப்பு:
மக்களவைத் தேர்தலை ஒட்டி பாஜக இதுவரை கூட்டணி பற்றி மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறது, தொகுதி பங்கீடு பற்றி பின்னர்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம். தொகுதிப்பங்கீசு குறித்து பேசுவதாக வெளியான செய்திகள் தவறானவை என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago