வேட்பாளர் அறிவிப்பில் நீலகிரி அதிமுக-வினர் அதிருப்தி

By ஆர்.டி.சிவசங்கர்

தலைமை அறிவிக்கும் வேட்பாளர்கள் மீதும் கட்சிப் பொறுப்பாளர்கள் மீதும் புகார் எழுப்புவதில் அதிமுக-வினருக்கு நிகர் அவர்களேதான். அந்த வகையில், நீலகிரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள சி.கோபாலகிருஷ்ணன் மீதும் அதிமுக-வினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

நீலகிரி தொகுதி முதல்வரின் தாய் வீடு என சிலாகிக்கும் அதிமுக-வினர், இம்முறை பலம் பொருந்திய வேட்பாளர் ஒருவரை நிறுத்தி திமுக-விட மிருந்து நீலகிரியைக் கைப்பற்ற தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தனர்.

திமுக சார்பில் இங்கு ஆ.ராசாவே போட்டியிடக்கூடும் என்பதும் இதற்கு ஒரு முக்கி யக் காரணம். கடந்த மாதம் குன்னூரில் நடந்த அரசு விழாவில் நீலகிரிக்காக ரூ.118 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அறிவித்தார் முதல்வர்.

அத்துடன், பழங்குடியினருக் காக பிரத்யேக மாக ரூ.9 கோடி மதிப்பிலான முழு மானியத்துடன் கூடிய டிராக்டர்கள், வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இத்தனையும் செய்துவிட்டு வேட்பாளர் தேர்வில் அசட்டை யாக இருந்துவிட்டதாக அதிமுக-வினர் புலம்புகின்றனர். இது குறித்து ’தி இந்து’விடம் பேசிய நீலகிரி அதிமுக முக்கியப் பொறுப்பாளர்கள், “ஆ.ராசாவை திமுக மீண்டும் இங்கே நிறுத்தினால் பணம் தாராளமாய் பாயும்.

அதை சமாளிக்க தகுதி யான வேட்பாளர் களத்தில் நிற்க வேண்டும். ராசாவை எதிர்த்து பரிதி இளம்வழுதியை நிறுத்துவதாக முதலில் பேச்சு வந்தது. பிறகு, மாவட்டச் செயலாளர் கலைச் செல்வன்தான் வேட்பாளர் என்றனர். ஆனால், இவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குன்னூர் நகர்மன்றத் தலைவரான கோபால கிருஷ்ணனை அறிவித்துள்ளனர்.

கட்சியில் அவ்வளவாக அறிமுகமில்லாத கோபால கிருஷ்ணனுக்கு குன்னூர் நகராட்சிக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும்படியான பெயரோ புகழோ இல்லை. சட்டம் படித்தவர் என்பதற்காக அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆ.ராசாவை சமாளிக்க படிப்புத் தகுதி மட்டுமே போதும் என்று எப்படி முடிவுக்கு வந்தார்கள் எனத் தெரியவில்லை’’ என்கிறார்கள்.

கோபாலகிருஷ்ணன் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது திமுக வட்டாரம்.

அதேசமயம், கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியை மதிமுக-வுக்கு விட்டுக் கொடுத்ததுபோல் இந்தத் தேர்தலில் கூட்டணியில் உள்ள தோழர்களுக்கு கொடுக்கக்கூடும் அதனாலேயே சாமானியர் ஒருவரை அதிமுக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் ஜெயலலிதா என்ற செய்திகளும் நீலகிரியை வலம்வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்