வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கண்காணித்த தலைமை தேர்தல் அதிகாரி

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் 322 வாக்குச் சாவடிகளில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்காக சென்னை கோட்டையில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. அதற்காக பெரிய எல்.சி.டி. டிவி வைக்கப்பட்டிருந்தது. கணினி வசதியும் செய்யப்பட்டிருந்தது. காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரையிலும் வாக்குப்பதிவு முழுவதும் தொடர்ந்து வெப் கேமரா மூலமாக கண்காணிக்கப்பட்டது.

தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அவ்வப்போது கட்டுப்பாட்டு அறைக்கு வந்து வாக்குப் பதிவினை கண்காணித்த வண்ணம் இருந்தார். இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் சிவஞானம், அஜய் யாதவ், சசிகுமார் ஆகியோர் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறுவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணித்தனர். மதியம் 12.30 மணியளவில் கட்டுப்பாட்டு அறையில் நிருபர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா, எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் இன்றி வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வாக்குப்பதிவு சதவீதத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வசதி முதல்முறையாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அறிமுகப்படுத் தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE