இலங்கை கடற்பரப்பிற்கு தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என யாழ்பாணம் மீனவர்கள் இலங்கை அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததால் இலங்கையில் புதிய அதிபராக பதவியேற்ற சிறிசேனா, யாழ்பாணம் சிறையில் உள்ள 15 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்ததுடன் கடந்த ஜுன் மாதத்திலிருந்து ஜனவரி மாதம் வரையிலும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 87 தமிழக மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க உத்திரவிட்டார். இதனை தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதல் இல்லாமல் கடந்த ஒரு மாத காலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்களின் அத்து மீறல் அதிகரித்துள்ளதாகவும், இதனை தடுக்க வலியுறுத்தி யாழ்பாணம் தமிழ் மீனவர்கள் இலங்கை அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து யாழ்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனி எமிலியாம்பிள்ளை யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முன்னர் தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதை இலங்கை கடற்படையினர் தடுத்தும், அத்துமீறும் மீனவர்களையும் கைது செய்தும் வந்தனர். ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கை கடற்படையினர் சுதந்திரமாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் அனுமதிக்கின்றனர்.
இதனால் தமிழக மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதுடன், எங்கள் மீனவர்களின் வலைகளை அறுத்தும், நாட்டுப் படகுகளை சேதப்படுத்தியும் சென்று விடுகிறனர்.
எனவே, தமிழக மீனவர்களின் எல்லை மீறும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேன, மீன்பிடித்துறை அமைச்சர் துலிப் வெதாரச்சி, கடற்றொழில் நீரியல்துறை செயலாளர் எஸ்.ரமேஸ்கண்ணன் ஆகியோரிடம் புகார் மனுக்களை அளித்துள்ளோம்.
மேலும் மார்ச் 6 அன்று தமிழக-இலங்கை மீனவ பிரநிதிகளுடான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கான அழைப்பு இலங்கை தமிழ் மீனவப் பிரநிதிகளுக்கு கிடைக்கவில்லை, எனவும் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago