திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மிகப் பெரிய தவறு: அன்புமணி ராமதாஸ் ஒப்புதல்

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது மிகப் பெரிய தவறு என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் என்னை முதல்வர் வேட்பாளராக ஒரு மனதாக தேர்ந்தெடுத்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் மது ஒழிப்பு, ஊழல் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகளை முன் வைத்து மக்களை சந்திப்போம். பாமக ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து தமிழகத்தில் பூரண மது விலக்கு மற்றும் நிரந்தரமாக ஊழலை ஒழிப்பதாகும்.

தமிழகத்தில் அதிமுக, திமுக அல்லாத மாற்று ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிமுக, திமுக வுக்கு மாற்றாக பாமக இருக்கும்.

பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அதிமுக, திமுக தவிர மற்ற கட்சியினர் எங்களுடன் கூட்டணி சேரலாம். பாஜக வந்தாலும் வரவேற்போம். தமிழகத்தில் பாஜகவைவிட பாமக பெரிய அரசியல் கட்சி. ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவினர் பணம், மது, பிரியாணி கொடுத்து ஓட்டுக்களை வாங்கியுள்ளனர். இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்