வினாடிக்கு 700 கன அடி கிருஷ்ணா நீர்: அடுத்த நான்கு நாட்களில் பூண்டி ஏரியில் நீர் இருப்பு அதிகரிக்கும்

By டி.செல்வகுமார்

சென்னை குடிநீர் தேவைக்காக அடுத்த 4 நாட்களில் வினாடிக்கு 700 கனஅடி கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்துசேரும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 26-ம் தேதி பகல் 12.30 மணிக்கு வினாடிக்கு 600 கனஅடி கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து 182 கிலோ மீட்டர் பயணம் செய்து 30-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 5 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் வந்துசேர்ந்தது.

புதன்கிழமை நிலவரப்படி, கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி தண் ணீர் திறக்கப்பட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் படிப்படியாக அதிகரித்து புதன் கிழமை காலை வினாடிக்கு 169 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

இதுதொடர்பாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து சேருமாறு கண்டலேறு அணையில் தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு ஆந்திராவை கோரியுள்ளது. அவர் களும் படிப்படியாக தண்ணீரை அதிகரித்து வருகிறார்கள். அதன் படி, அடுத்த 4 நாட்களில் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 700 கனஅடி தண்ணீர் வரும். கண்டலேறு அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி பாசனத்துக்கும், குடி நீருக்கும் பயன்படுத்தப்படுவதால், வினாடிக்கு 1700 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டால், பாசனம், குடிநீர் தேவைபோக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துசேரும்.

சென்னையில் கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டதால், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது இந்த நிலையில், பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து அதிகரித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் நிச்சயம் சமாளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11057 மில்லியன் கனஅடி. இந்த ஏரிகளில் தற்போதைய நீர் இருப்பு 3056 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதேநாளில் 3965 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு ஏரியான வீராணம் ஏரியில் 706 மில்லியன் கனஅடி (மொத்த கொள்ளளவு 1456 மில்லியன் கனஅடி) நீர்இருப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்