அம்மா சிமென்ட் புகார்களை தடுக்க ‘108’ ஆலோசனையை நாடுகிறது அரசு

By எஸ்.சசிதரன்

மலிவு விலை அம்மா சிமென்ட் திட்டத்தில் முறைகேட்டை தடுப்பதற் காக அமையவுள்ள தகவல் மற்றும் புகார் மையத்துக்கான 12 இலக்க எண் இறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை செம்மையாகச் செயல்படுத்துவதற்காக பயிற்சி அளிக்கக்கோரி `108’ அவசர சிகிச்சைப் பிரிவு அதிகாரிகளின் உதவியை அரசு நாடியுள்ளது.

இது குறித்து `தி இந்து’விடம் அதிகாரிகள் நேற்று தெரிவித்ததாவது:

தமிழகத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள அம்மா சிமென்ட் திட்டத் தின் கீழ், அதிகபட்சமாக செட்டிநாடு நிறுவனத்திடமிருந்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,

மாதமொன்றுக்கு செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்திடமிருந்து 32,757 டன்னும், ராம்கோ -32,691 டன், அல்ட்ராடெக்- 30,106, இந்தியா சிமென்ட்-32,374, டால்மியா சிமென்ட்- அசோசியேட்டட் சிமென்ட்- 30,360, ஜூவாரி -10,077 டன்னும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த தனியார் நிறுவனங்கள், ஒருங்கிணைப்பு அதிகாரிகளை ஒதுக்கியுள்ளன.

12 இலக்க எண் விவரம்

இத்திட்டத்தில் முறைகேடு நடக்கா மல் தடுக்க, 1800-425-22000 என்ற 12 இலக்க இலவச தொலைபேசி எண் அளிக்கப்பட்டுள்ளது. காலை 8 முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம். ammacement.com என்ற இணைய தளமும் தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, தமிழகத்தில் 108 அவசர சிகிச்சைப் பிரிவை வெற்றிகர மாக நடத்திவரும் இஎம்ஆர்ஐ அதி காரிகளிடம் ஆலோசனை பெறவுள் ளோம். தொலைபேசியில் அழைப்பு வந்ததும் துரிதமாக செயல்படுவது எப்படி? தொடர்புடைய மற்றவர்க ளுக்குத் தகவல்களை உடனுக்குடன் எப்படி தெரியப்படுத்துவது போன்ற தகவல்கள் அவர்களிடமிருந்து பெறப்படும். அம்மா சிமென்ட்டை வாங்கியவர்களே மீண்டும் வாங்கு வதை தடுக்க, கிட்டங்கி அதிகாரிகள் பதிவேடு ஒன்றை பராமரிப்பார்கள்.

முறைகேடுகளைத் தடுக்க ஆட்சி யர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட் டுள்ளது. அவர்கள் பறக்கும்படை அமைத்து திடீர் ஆய்வு நடத்தலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

2011 மக்கள் தொகை விவர அடிப்படையில், மாதந்தோறும் 2 லட்சம் டன் சிமென்ட் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்துத் தரப் படும் . அதிகபட்சமாக, சென்னைக்கு 10,335 டன், காஞ்சி, திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு 10 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்யப்படும். பெரம்பலூர் (1,567 டன்), நீலகிரி (2,039) மற்றும் அரியலூர் (2,093) ஆகியவை குறைந்த ஒதுக்கீடு பெறும் மாவட்டங்களாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்