இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 130 வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் பூந்தமல்லியில் நேற்று முன் தினம் நடந்தது.
இதில் இளங்கோவன் பேசியதாவது: வெற்றி, தோல்வி எது வந்தாலும் நம்பிக்கையை இழக்காத காங்கிரஸ் கட்சியை ஒழித்துவிடுவோம் என்கிறார்கள் பாஜகவினர். காங்கிரஸை யாராலும் ஒழிக்கமுடியாது. இந்தியாவின் மதசார்ப்பற்ற கொள்கையை மோடி அரசு தூக்கி எறிந்து விட்டது. இந்தியாவில் மோடி ஆட்சி தொடரும் ஒவ்வொரு நாளும் கறுப்பு நாள். மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க போவதாக அறிவித்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது: நடிகர்கள் கட்சியில் சேரக் கூடாதா? ரஜினியை கட்சியில் சேர வேண்டும் என பாஜக அழைப்பு விடுக்கவில்லையா? பாஜகவின் மத்திய அரசில் கேபினட் மந்திரியாக இருக்கும் ஸ்மிருதி இராணி நடிகை இல்லையா? சமீபத்தில் சென்னை வந்த பாஜக தலைவர் அமித்ஷா நடிகர் நெப்போலியன், நடிகை காயத்ரி ரகுராமை எல்லாம் கட்சியில் சேர்க்கவில்லையா? நடிகர், நடிகைகளை கட்சியில் வைத்திருக்கும் பாஜக என்னை விமர்சிக்கலாமா? என கேள்வி எழுப்பினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் வசந்தகுமார், கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பூந்தமல்லியில் நேற்று முன் தினம் நடந்த காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் நடிகை குஷ்பு. அருகில் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், வசந்த்குமார் உள்ளிட்டோர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago