பி. எஸ்.என்.எல். பேன்சி எண்கள் ஏலம் முடிந்தது : 73 பேர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

பி.எஸ்..என்.எல். நிறுவனம் சார்பில் புதிய பேன்சி செல்போன் எண்கள் ஆன்லைன் மூலம் ஏலம் வழங்குவது திங்கள்கிழமை முடிவடைந்தது. இதில் 73 பேர் கலந்து கொண்டு பேன்சி எண்களைத் தேர்வு செய்தனர்.

வாடிக்கையாளர்களுக்குப் புதிய பேன்சி எண்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடந்த மார்ச் 17ம் தேதி அறிவித்து இருந்தது. பேன்சி எண்களை வாடிக்கையா ளர்கள் தேர்வு செய்யும் வகையில் www.chennai.bsnl.co.in என்ற இணையதள மூலம் திங்கள்கிழமை (மார்ச் 31) வரை 15 நாட்கள் ஏலம் நடைபெற்றது.

இது குறித்து அண்ணாசாலை பி.எஸ்.என்.எல். தொலைபேசி வர்த்தகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “தொலைபேசிகளுக் கான ஆயிரம் பேன்சி எண்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட் டிருந்தது. ஆன்லைன் ஏலத்தில் பங்குபெற ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை 5 மணியுடன் முடிந்த ஏலத்தில் ஆயிரம் பேன்சி எண்க ளுக்கான ஏலத்தில் 73 பேர் கலந்து கொண்டனர். கடந்த 2 ஆண்டு களாகத்தான் பேன்சி எண் வழங்கும் ஏலம் நடைபெற்று வருகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்