மவுலிவாக்கம் கட்டிட விபத்து வழக்கு மார்ச் 17-க்கு ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான வழக்கை, மார்ச் 17-க்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும் என தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல், நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், விதிகளை மீறி சட்டத்துக்குப் புறம்பாககட்டிடம் கட்டப்பட்டதாகவும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சோமையாஜி விபத்து தொடர்பான ரகுபதி கமிஷன் அறிக்கை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப் பட உள்ளதாக தெரிவித்தார். எஞ்சியுள்ள மற்றொரு கட்டிடத்தை இடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கை உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், விசாரணை தேவைப்பட்டால் வழக்கை சி.பி.ஐக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

எஞ்சியுள்ள மற்றொரு கட்டிடத்தை இடிப்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் 10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு மார்ச் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்