மாரத்தான் போட்டிகளால் குப்பை குவியலாக மாறிய மெரினா: சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

பல்வேறு அமைப்புகள் நடத்தும் மாரத்தான் போட்டிகளால் மெரினா கடற்கரை குப்பை குவிய லாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை விளங்குகிறது. தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். விடுமுறை நாட் களில் மெரினா கடற்கரையில் பல்வேறு அமைப்புகள் மாரத் தான், பேரணி போன்ற நிகழ்ச்சி களை நடத்துகின்றனர். இந்நிலை யில் அரசியல் கட்சி ஒன்று நேற்று மெரினா கடற்கரையில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

மாரத்தானில் பங்கேற்றவர் களுக்கு உணவு, தண்ணீர் போன் றவை பாலிதீன் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் வழங் கப்பட்டன. மாரத்தானில் பங்கேற் றவர்கள் சாப்பிட்டு முடித்த பிறகு காலி பாட்டில்கள் மற்றும் பாலிதீன் பைகளை கடற்கரையில் போட்டுவிட்டு சென்றனர்.

இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தினேஷ் காந்த் என்பவர் கூறும் போது, “நான் தினமும் நடைப் பயிற்சிக்காக இங்கு வருவேன். தற்போது மாரத்தான் போட்டி நடந்து முடிந்துள்ளதால் பார்க் கும் அனைத்து இடங்களும் குப் பையாக உள்ளது. குறிப்பாக கண்ணகி சிலையிலிருந்து கலங் கரை விளக்கம் வரை கடற்கரை முழுவதும் குப்பைகளை மட்டும் தான் பார்க்க முடிகிறது’’ என்றார்.

சுற்றுலா பயணியான கார்த்தி கூறும்போது, “நாங்கள் மதுரை யிலிருந்து சுற்றுலாவுக்காக சென்னை வந்தோம். மெரினா கடற்கரையில் ஒரே குப்பையாக இருக்கிறது.

மாரத்தான் போன்ற போட்டிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள் பங்கேற்பாளர்கள் குப்பைகளை போட வசதியாக அதிக எண்ணிக்கையில் குப்பை தொட்டிகளையும் அமைக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்