பொங்கல் பண்டிகைக்கு 7,250 சிறப்புப் பேருந்துகள்: சென்னையில் இருந்து 4,655 பேருந்துகள்

By செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சென்னையிலிருந்து 4,655 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் 2,595 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 7,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, கோயம்பேடு புறநகர்ப் பேருந்து நிலையத்திலிருந்து, இம்மாதம் 10ம் தேதி 600 சிறப்பு பேருந்துகளும், 11ம் தேதி 470, 12ம் தேதி 720, 13ம் தேதி 1,408, 14ம் தேதி 1,457 சிறப்பு பேருந்துகளும், மொத்தம் 4,655 சிறப்பு பேருந்துகளும் மற்றும் 15ம் தேதியன்று பயணிகளின் தேவைக்கேற்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

அதேபோன்று, சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதிலும் இருந்து, 10ம் தேதி 300 சிறப்பு பேருந்துகளும், 11ம் தேதி 400 சிறப்பு பேருந்துகளும், 12ம் தேதி 500 சிறப்பு பேருந்துகளும், 13ம் தேதி 595 சிறப்பு பேருந்துகளும், 14ம் தேதி 800 சிறப்பு பேருந்துகளும், மொத்தம் 2,595 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 7,250 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஊர் திரும்ப வசதியாக, இதே அளவிலான பேருந்துகளை 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் www.tnstc.in என்ற இணையதளம் மூலம், பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 டிக்கெட் சிறப்பு முன்பதிவு மையங்கள் செயல்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மாநகர் போக்கு வரத்துக் கழகத்தின் சார்பில் ஜனவரி 16 முதல் 18 வரை பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு, 250 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து, சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண். 2479 4709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்