உடுமலைப்பேட்டை சுதந்திரப் போராட்ட வீரர்: எத்தலப்பருக்கு மணிமண்டபம் கட்டுமா அரசு?

By எம்.நாகராஜன்

சுதந்திரப் போராட்டங்களில் ஈடு பட்ட இந்தியர்களை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் கொன்றிருக் கிறார்கள். ஆனால், ஆங்கிலேயர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றிய குறுநில மன்னர் ஒருவர், திருப்பூர் மாவட்டம் உடு மலை அருகே வாழ்ந்திருக்கிறார்.

அத்தகைய வீரத்துக்கும், பெருமைக்கும் உரிய தியாகியின் கல்வெட்டுகள் வீதியில் கிடப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை-திருமூர்த்தி மலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தளி பேரூராட்சி.

இங்கு, கி.பி.1800-ல் தென் கொங்கு நாடு என்று அழைக்கப் பட்ட பழநி, விருப்பாச்சி, ஆயக்குடி, இடையகோட்டை, ஊத்துக்குழி, தளி ஆகிய 6 பகுதிகளில், பாளை யக்காரர்கள் ஆட்சி செய்து வந்துள்ளதாக, எத்தலப்பன் வரலாற்று நூல் கூறுகிறது.

தளி பாளையத்தை, அவர் களது வம்சாவழியில் 16 பேர் ஆண்டுள்ளனர். இதற்கான கல்வெட்டுகள், திருமூர்த்தி அணை பின்புறமுள்ள ஆலமரத்தடியில் கிடக்கிறது. இறுதியாக மலை யாண்டி எத்தலப்பர், அவரது தம்பி வெங்கிடுபதி எத்தலப்பர் ஆண்டுள்ளனர்.

கி.பி.1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலே யர்கள் தூக்கிலிட்ட செய்தி, எத்தலப்ப நாயக்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயநகரப் பேரரசு காலத்தில், மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தானையும், வீரபாண்டிய கட்ட பொம்மனையும் வீழ்த்திய பிறகு, ஆங்கிலேயர்கள் தங்களின் ஆதிக் கத்தில் அனைத்துப் பகுதிகளை யும் கொண்டுவரும் நோக்கில், பாளையங்களுக்கு தூதர்களை அனுப்பியுள்ளனர். அந்த வகை யில், தஞ்சாவூரில் இருந்து தளிக்கு அனுப்பப்பட்ட தூதுவர்களின் தலைவன் அந்திரை கேதிஷ்.

ஆங்கிலேயருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கவும், கட்ட பொம்மனை தூக்கிலிட்ட வெள்ளை யருக்கு பாடம் புகட்டவும், அவனை மட்டும் தனியே அழைத்து கைது செய்து துக்கிலிட்டுள்ளனர்.

திணைக்குளம் கிராமத்தில் வெள்ளையனை தூக்கிலிடப்பட்ட அந்த இடம், தூக்கு மரத் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. கொங்கு பாளையக்காரர்களின் சுதந்திர கிளர்ச்சிக்கும், எழுச்சிக் கும் இந்த கல்வெட்டே ஆதார மாக உள்ளது. தற்போது அந்த இடம், தனியார் ஒருவரின் தென்னந்தோப்பாக உள்ளது. அங்கு புதைக்கப்பட்ட வெள்ளைய ருக்கு சமாதி எழுப்பப்பட்டு, அதன்மேல் கல் சிலுவையும் வைக்கப்பட்டுள்ளது.

சமாதியை மூடியுள்ள கல்வெட் டில், கி.பி.1801 துன்மிகி வருடம் சித்திரை மாதம் 13-ம் தேதி, பறங்கியர் அந்திரை கேதிஷ், தெய்வமாகி அடங்கின சமாதி என தமிழில் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொல்லியல் ஆய் வாளர் பூங்குன்றன் கூறுகையில், ஆங்கிலேயனை தூக்கிலிட்ட முதல் சுதேச வீரர்கள் வரிசையில், தளி பாளையக்காரர் எத்தலப்பர் இருந்துள்ளார் என்பதற்கு ஆதார மாக, இந்தக் கல்வெட்டு உள்ளது. இதனை, அரசு கையகப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

நான்குபுறமும் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பு வேலி, அந்த சமாதியை நூற்றாண்டுகளாக காத்து நிற்கிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்து, பலரும் பார்வையிட்டு செல்கின்றனர்.

சொந்த மண்ணில் அந்நிய ருக்கு எதிரான போரில் எத்தலப் பர் கொல்லப்பட்டார். அவர் வாழ்ந்த அரண்மனையும் சூறையாடப் பட்டுவிட்டது. இத்தகைய வீரமும், தேச உணர்வும் கொண்ட ஒருவ ரின் வரலாறு, இன்றைய தலை முறையினர் பலருக்கும் தெரியாது.

இதுகுறித்து தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக மாநில செயல் தலைவர் கே.முருகவேல் கூறும்போது, ஆங்கிலேயருக்கு எதிரான போரில் ஒரே நாள் இரவில் தளி கோட்டை தரைமட்ட மாக்கப்பட்டது. போரில் எத்தலப்பர் கொல்லப்பட்டார்.

சிறந்த சுதந்திர போராட்ட தியாகியான அவருக்கு மணிமண்ட பம் அமைக்க வேண்டும் என 2014 மே மாதம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பபட்டது. திருப்பூர் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இன்றைய தலைமுறை யினருக்கு எத்தலப்பரின் வர லாற்றை தெரிந்துகொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்