டெங்கு காய்ச்சலை தடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். இராஜபாளையத்தில் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட 12 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

பணியாளர்கள் பற்றாக்குறை, தரமான சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாமை, குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்றாதது, கொசுவைக் கட்டுப்படுத்தாதது ஆகியவை குழந்தைகளின் இறப்புக்கு காரணமாக இருக்கின்றன. சுகாதாரப் பணிகள் சரிவர நடைபெறாததால் டெங்கு போன்ற காய்ச்சல்கள் ஏற்படுகின்றன.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டோருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும், காய்ச்சல் பரவா மல் தடுக்கவும் உரிய நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும் பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்