ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால், இன விருத்திக்குப் பயன்படுத்தப்படும் காளைகள், இறைச்சிக்காக கொல்லப்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இத் தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் நாட்டு மாடுகள் இனம் அடியோடு அழிந்துபோகும் அபாயம் உள்ளது என்று ஜல்லிக்கட்டு அமைப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் பி.ராஜசேகரன், ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
தமிழகத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவைதவிர, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களில் எருதுவிடுதல் என்னும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகளுக்கு முழுக்க, முழுக்க உள்ளூர் காளை மாடுகளே பயன்படுத் தப்படுகின்றன. காஞ்சி, சென்னை, திருவள்ளூர் உள் ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இப்போட்டிகள் நடப்பதில்லை. தற்போது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக் கப்பட்டிருப்பதால், தமிழகத் தில் உள்ளூர் மாடு இனங் கள் பரவலாக அழிவை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, ஒரு பகுதியில், 10 ஆயிரம் காளை மாடுகள் பந்தயத்துக்குப் பயன்படுத்தப்படும் நிலையில், அதற்காக, பல ஆயிரக்கணக்கான கன்றுகள் மற்றும் நடுத்தர வயதுடைய காளைகள், ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்யப்படுகின்றன. அந்த ஆயிரக்கணக்கான மாடுகளில், நான்கில் ஒரு மாடு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுதியானதாக மாறுகிறது. மற்றவை இதர பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், ஜல்லிக்கட்டு மாடுகள் மட்டுமின்றி, அந்த நோக்கத் துக்காக தயாராகும் ஆயிரக்கணக்கான மாடுகளின் உரிமையாளர்கள் சிறிய வயதிலேயே அவற்றை இறைச்சிக்காக விற்றுவிடும் போக்கு காணப்படுகிறது. இனவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் காளையினங்கள், சிறுக, சிறுக அடியோடு அழியும் அபாயம் உள்ளது. இவ்வாறு ராஜசேகர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago