வணிக வரித்துறையினர் நெருக்கடி:வர்த்தகர் சங்கம் போராட்ட அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வணிக வரித்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் வணிகர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக, மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கத் தலைவர் டி. கிருபாகரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

திண்டுக்கல் மாவட்ட வணிகவரி அலுவலகத்தில் அதிகாரிகள் வணிகர்களிடம் கடந்த 2005-ம் ஆண்டு முதல், முடிந்த கணக்குகளை மறுபடியும் தணிக்கை செய்து ஆய்வுக்கு எடுத்து, லட்சக் கணக்கான ரூபாய் வரி மற்றும் அபராதம் விதிக்கின்றனர்.

தமிழக அரசின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதாகக் கூறிக் கொண்டு வணிகவரி அதிகாரிகள், உள்நோ க்கத்துடன் வணிகர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக் கின்றனர்.

குறிப்பாக, திண்டுக்கல் இரும்பு வியாபாரிகளின் தொழிலை முடக்கும் வகையில், பலருக்கு தவறான வரிவிதிப்பு நோட் டீஸ் வழங்கி உள்ளனர். வணிகவரி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வணிகர்களை நேரடியாக அழைத்துப் பேசி, தவறான வரிவிதிப்பை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட தொழில் வர்த்தகர் சங்கம், தமிழக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்கும். நேர்மையான வணிகர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களைக் காப்பாற்ற, தொழில் வர்த்தகர் சங்கம் போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்