சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்: நீதிபதிகள் நியமனத்துக்கு ஆணையம் அமைக்கும் மசோதாவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

By செய்திப்பிரிவு

மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒய்.கிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் உச்ச நீதிமன் றத்தில் தலைமை நீதிபதி தலைமை யிலான குழுவும், உயர் நீதிமன்றங் களில் தலைமை நீதிபதி தலை மையிலான குழுவும் (கொலிஜியம்) புதிய நீதிபதிகளை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தேர்வு செய்கிறது. இந்த நடை முறை அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில். கொலிஜியம் முறையில் நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, நீதிபதிகள் நியமனம் செய்வதற்காக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உரு வாக்கும் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் 7 சட்டப் பிரிவு களில் (124, 127, 128, 217, 222, 224, 231) திருத்தம் செய்யப் பட்டு, இந்த மசோதா நிறைவேற் றப்பட்டுள்ளது. இந்த மசோதா அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையை அழிக்கும் செயலாகும்.

கொலிஜியம் முறையில் குளறுபடி இருந்தால் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க லாம். அதைவிட்டு நீதிபதிகள் நிய மனம் செய்வதற்கு நீதித் துறைக்கு தொடர்பில்லாத அரசியல் வாதிகள், அதிகாரிகள் அடங்கிய ஆணையத்தை அமைப்பது சட்ட விரோதம். எனவே, தேசிய நீதிபதி கள் நியமன மசோதாவை அமல் படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த மசோதா அரசியலமைப்புக்கு விரோத மானது என்று கூறி மசோதாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்