மெரினா கடற்கரையில் 34 டன் குப்பை அகற்றப்பட்டது

By செய்திப்பிரிவு

மெரினா கடற்கரையில் காணும் பொங்கலையொட்டி சேர்ந்த 34 மெட்ரிக் டன் குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.

காணும் பொங்கலை முன்னிட்டு சனிக்கிழமையன்று லட்சக்கணக் கான மக்கள் மெரினா கடற்கரை பகுதியில் கூடினர். பொது மக்கள் குப்பை போடுவதற்கு கடற்கரை பகுதிகளில் ஏராளமான குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு இருந் தன. எனினும், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், காகித தட்டுகள் உள்ளிட்டவை கடற்கரை மணல் பகுதியில் ஏராளமாக போடப்பட்டு இருந்தன. இதனால் கடற்கரை முழுவதும் பெருமளவில் குப்பை சேர்ந்திருந்தது.

இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பாக சனிக்கிழமை இரவு 10 மணி முதல் விடியற் காலை 4 மணி 240-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் மெரினா கடற்கரையில் சுமார் 24 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.

பின்பு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை மேற்கொள் ளப்பட்ட குப்பை அகற்றும் பணியில் சுமார் 200 துப்புரவு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சுமார் 10 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டன.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, ‘‘மெரினா கடற்கரையில் காணும் பொங்கலை யொட்டி குவிந்த மொத்தம் 34 மெட்ரிக் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. இவை 3 குப்பை அள்ளும் லாரிகள் மூலம் அகற்றப்பட்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்