திருச்சி, வேலூர் துணை மேயர் உட்பட உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பாளர்கள்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு

By செய்திப்பிரிவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில் திருச்சி, வேலூர் மாநகராட்சி துணைமேயர் உட்பட 14 பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, வரும் 22-ம் தேதி நடக்கவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர், துணைத் தலைவர், மாநகராட்சி துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், நகர்மன்ற மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம்:

தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தொ.மு.நாகராஜன் (மாவட்ட அவைத் தலைவர்), கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜி.ரவிச்சந்திரன் (19-வது வார்டு உறுப்பினர்), வேலூர் மாநகராட்சி துணை மேயர் வி.எஸ்.சொக்கலிங்கம் (43-வது வார்டு உறுப்பினர்), திருச்சி துணை மேயர் ஜெ.சீனிவாசன் (மாநகர் மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளர்), கோவை மாநகராட்சி வடக்கு மண்டலக் குழுத் தலைவர் சி.நடராஜன் (மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்), மதுரை மாநகராட்சி 3-வது மண்டலக்குழு தலைவர் கே.சண்முகவள்ளி ஆகியோர் போட்டியிடுவர்.

ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிக்கு ஒரத்தநாடு கோவிந்தராஜ், முதுகுளத்தூர் -ஆர்.தருமர், ஓமலூர் - ஏ.ஜோதிமணி, தேவகோட்டை - ஜெ.ஸ்டெல்லா, சிவகாசி - எஸ்.சுடர்வள்ளி ஆகி யோர் நிறுத்தப்படுகின்றனர்.

ராணிப்பேட்டை நகர்மன்ற துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.ஷாபுதீன், குளச்சல் நகர மன்ற துணைத் தலைவர் பதவிக்கு என்.முஹம்மது தாஸிம், பெத்த நாயக்கன்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவருக்கு எஸ்.பானுமதி ஆகியோர் நிறுத்தப் படுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்