படகு பழுதானதால் நடுக்கடலில் சிக்கித் தவித்த புதுச்சேரி மீனவர்கள் 6 பேரை, இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
புதுச்சேரியிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு மீன்பிடிக்க ஆறு பேர் பைபர் மீன்பிடி படகில் புறப்பட்டனர். காலை 7 மணிக்கு அவர்களது படகில் இருந்த என்ஜின் பழுதானது. அதையடுத்து கிடைத்த தகவல்படி, இந்திய கடலோர காவல்படை தனி படகில் கேப்டன் குமார் தலைமையில் புறப்பட்டுச் சென்றனர்.
கரையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இருந்த அவர்கள் படகை கயிறு கட்டி இழுத்து கொண்டு பகல் 12.30 மணிக்கு தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்துக்கு வந்தனர்.
இது குறித்து இந்திய கடலோர காவல்படை அதிகாரி சோமசுந்தரம் கூறுகையில், "இந்திய கடலோரக் காவல்படை படகு 3 கி.மீ. தொலைவு மட்டுமே செல்ல முடியும். கடல் அமைதியாக இருந்ததால் 18 கி.மீ. தொலைவு சென்று மீட்டோம். மீன்பிடி படகில் திசைக்காட்டு கருவி இருந்ததால் சரியான இடத்தை தெரிவித்தனர். கடலில் சிக்கிக் கொண்டால் 0413 - 2257956 என்ற எண்ணுக்கு 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.
மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைப்படகுதான் கடலுக்கு செல்ல தடையுண்டு. சிறிய பைபர் போட் கடலுக்கு செல்லலாம் என்று மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago