ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது.

அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.வளர்மதி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கலின் போது அவருடன் எம்.பி. பா.குமார், அரசு தலைமை கொறடா மனோகரன், மாநில கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி, மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்னவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி 27-ம் தேதி முடிவடைகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த செப்டம்பர் மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் தனது எம்எல்ஏ பதவி மற்றும் முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து தேர்தல் ஆணையம் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இடைத்தேர் தலுக்கான வேட்புமனு தாக் கல் இன்று தொடங்கியது. வரும் 27-ம் தேதி முடிவடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE