ஸ்ரீரங்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய வுள்ள கட்சித் தலைவர்கள், பேச்சாளர்கள் பட்டியலை 27-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தங்களது வேட்பாளருக்காக பிரச்சாரத்துக்கு செல்லும்போது அதற்கான போக்குவரத்து செலவு, சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கணக்கில் சேராது.
இதற்காக, தேர்தல் அறிவிக்கை தொடங்கி 7 நாட்களுக்குள் வேட்பாளருக்காகப் பிரச்சாரம் செய்யும் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் 40 நட்சத்திரப் பேச்சாளர்களையும், அங்கீகாரம் பெறாத கட்சிகள் 20 பேரையும் பட்டியலிட்டு, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை, வரும் 19-ம் தேதி வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து, தங்களது வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யவுள்ள கட்சித் தலை வர்களின் பெயர் பட்டியலை 27-ம் தேதிக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பட்டியலில் உள்ள தலைவர்கள், பேச்சாளர்களைத் தவிர மற்றவர்களின் செலவுகள், வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago