‘கிராமங்களுக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும்’: அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் பேச்சு

நாட்டில் இன்னும் 50 கோடி மக்களிடம் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கிறது. கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றமடைய வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க முன்வர வேண்டும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் கள் சங்கத்தின் 34-வது மாநாடு தொடக்க விழா மற்றும் சங்கத்தின் புதிய கட்டிடதிறப்பு விழா சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சங்கத் தலைவர் பி.விஸ்வநாதன் வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.சம்பத், புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். கரூர் வைஸ்யா வங்கி நிர்வாக இயக்குநர் கே.வெங்கட் ராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் பேசியதாவது: மத்திய அரசின் புதிய கொள்கைகளால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து, பொதுத் துறை வங்கிகளுடன் தனியார் வங்கிகள் இணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் பெரிய பெரிய முதலா ளிகள், இந்த வங்கிகளை விழுங் கும் ஆபத்து உள்ளது.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகி றது. இதை சமாளிக்க வங்கி ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு என்பது அவசியமாக இருக்கிறது. எனவே, வங்கி ஊழியர்களுக்கான புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்ள வேண்டும். நாட்டில் கடந்த 45 ஆண்டுகளாக பொதுத்துறை வங்கிகள் செயல்படுகின்றன. ஆனால், இன்னும் 50 கோடி மக்கள் வங்கிக் கணக்கு தொடங் காமலே உள்ளனர். கிராமங்களை முன்னேற்ற வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க முன்வர வேண்டும். விவசாயம், சுய வேலை வாய்ப்பு, குடிசைத் தொழில் கள், கட்டுமானத் தொழில் உள்ளிட்டவற்றுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE