தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய இரு தினங்களிலும், எல்லைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் எனக் கோரி அண்டை மாநில அரசுகளுக்கு தேர்தல் துறை கடிதம் எழுத திட்ட மிட்டுள்ளது.
தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், வழக்கமாக வாக் குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு மதுக் கடைகள் மூடப்படும். இதுபோல் வாக்குகளை எண்ணும் நாளன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
ஆனால், இப்போதுள்ள நிலை மையை கருத்தில் கொண்டு, மதுக்கடைகளை ஒரு நாள் முன்னதாகவே மூடினால் தேவை யற்ற பிரச்சினைகளைத் தடுக்கலாம் என்று கருதி, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 24-ம் தேதிக்கு 3 நாள் முன்பாக, அதாவது ஏப்ரல் 21-ம் தேதியே டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் எனக் கோரி தமிழக அரசுக்கு தேர்தல் துறை ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நாளில் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் மதுக் கடைகள் இயங்கினால், இங்கு டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டிருந்தும் பயனின்றி போய் விடும்.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நாளுக்கு இரு தினங்களுக்கு முன்பும், வாக்குப்பதிவு நாளன்றும் எல்லைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் என்று கோரி ஆந்திரம், கேரளம் மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு தேர்தல் துறை கடிதம் எழுதவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago