குடிநீர் பிரச்சினை: பெண்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 25-வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி பெண்கள் காமராஜர் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பெண்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் நகராட் சிக்கு உள்பட்ட 25-வது வார் டான சேக்குபேட்டை சாலை தெருவில் பல நாள்களாக குடிநீர் வருவதில்லை. அருகில் உள்ள தெருக்களில் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மாற்று ஏற்பாடாக லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தெருவின் மையப்பகுதியில் லாரி நிறுத்தப்படுகிறது. வயதான எங்களால் அங்கு சென்று குடிநீர் பிடித்து, தூக்கி வரமுடிவதில்லை. வீடுகளிலேயே குடிநீர் கிடைப்பதற்கான வழிகளை நகராட்சி எடுக்க வேண்டும். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டோம்” என்றார் அவர்.

மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அப்புறப்படுத்த முயன்றனர். தீர்வு கிடைக்காமல் செல்ல மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் நகராட்சி பொறியாளர் சுப்புராஜ், 25-வது வார்டு நகரமன்ற உறுப்பினர் மாதவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வெள்ளிக்கிழமை முதல் சீராக குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பெண்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

இது குறித்து பொறியாளர் சுப்பு ராஜ் கூறியதாவது: வறட்சி காரணமாக ஏற்கெனவே குடிநீர் எடுக்கப்பட்டு வந்த நீர் ஆதாரங்கள் வற்றியுள்ளன. அதனால் தேனம்பாக்கம் பகுதியில் பாலாற்றங்கரையில் 10 ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளோம். மின் இணைப்புகளும் பெறப்பட்டுள்ளன. அங்கிருந்து குடிநீர் கொண்டு வரும் பணிகள் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. வெள்ளிக்கிழமைக்குள் தீர்க்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்