தமிழகத்தில் மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றன. அப்படி ஒரு அலை தமிழகத்தில் இருப்ப தாக பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் தெரியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் என்.சங்கரய்யா கூறியுள்ளார்.
வடசென்னை மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் வேட்பாளர் உ.வாசுகியை ஆதரித்து நம்மாழ்வார்பேட்டை யில் திங்கள்கிழமை இரவு பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தியாவை மத ரீதியாகப் பிளவுபடுத்த நினைக்கும் பாஜக வையும், இந்தியாவிற்கு விரோத மான பிற்போக்குக் கொள்கை யுடைய காங்கிரசையும் வீழ்த்து வதற்காக இத்தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டும், இந்திய கம்யூனிஸ்டும் இணைந்து போட்டியிடுகின்றன.
குஜராத் மீனவர்கள் பாகிஸ் தானில் சிறை வைக்கப்பட்டுள் ளனர். அவர்களை மீட்க முடியாத மோடி தமிழக மீனவர்களையா மீட்கப் போகிறார்?
தமிழகத்தில் சில திராவிடக் கட்சிகள் இவருக்குப் பின் அணிவகுத்து நிற்கின்றன. அவர்களைப் பார்த்து நான் பரிதாபப்படுகிறேன். தமிழகம், புதுச்சேரியில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த எந்த வேட்பாளரும் நாடாளு மன்றத்துக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுத்தினால்தான் இந்தியாவைப் பாதுகாக்கும் பெருமை தமிழகத்துக்குச் சேரும்.
ஓய்வூதியப் பணத்தையெல் லாம் பெரு முதலாளிகளுக்குக் கொடுத்துள்ளது காங்கிரஸ். வங்கி கள், ஆயுள் காப்பீட்டுக் கழகம், நிலக்கரி உள்ளிட்ட துறைகளைத் தனியார் மயமாக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும். அவையெல்லாம் இந்தியாவின் சொத்து.
கடந்த 10 ஆண்டுகளில் விவ சாயிகளுக்கும் ஏழை தொழிலாளர் களுக்கும் காங்கிரஸ் பெரும் துரோகம் செய்து விட்டது. காங்கிர சின் பிற்போக்கான பொருளா தாரக் கொள்கையை முறியடிக்க வேண்டும். மின்தட்டுப்பாடு பற்றி திமுக, அதிமுக பேசுவது இந்திய அரசியலுக்கு அவசியமற்றது, தேவையற்றது. இது தமிழ்நாட்டுப் பிரச்சினை. சட்டமன்றத் தேர்தலின் போது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினை. அதிமுக எம்.ஜி.ஆர், பெரியார் கொள்கைகளை விட்டு வெகுதூரம் விலகிவிட்டது. காங்கிரஸ், பாஜக அமைச்சரவைகளில் திமுக பங்கு பெற்றதால் அவர்களால் இந்த இரண்டு கட்சிகளையும் விமர்சிக்க முடியவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயி கள் நலன், தொழிலாளர் நலன் முதலியவற்றுக்கு குரல் கொடுப் போம். 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு நுழைந்தால் மட்டுமே இதைச் சாதிக்க முடியும்.
இந்திய விடுதலைக்கு பாடுபட் டது கம்யூனிஸ்ட். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தியாவின் எதிர்காலத்துக்கு நல்லது.
இவ்வாறு சங்கரய்யா பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago