கோவை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1.26 கோடி மதிப்பிலான 5 கிலோ தங்கம் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை சுங்க வரித்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு சில்க் ஏர் விமானம் நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் வந்தது. விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளிடம் கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த மொகபத்கான் (41) என்ற பயணி எடுத்து வந்த பையை சோதனையிட்டபோது 14 கட்டிகள் வீதம் மொத்தம் 5 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 2 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது கண்டறியப் பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, கோவை மண்டல கலால் மற்றும் சுங்கவரித் துறை கூடுதல் ஆணையர் என்.ஜே. குமரேசன் கூறியதாவது:

சிங்கப்பூரில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக எங்களுக்கு ஏற்கெனவே ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானத்தில் இருந்து இறங்கிய அனைத்துப் பயணிகளின் உடைமைகளையும் முழுமையாக சோதனையிட்டோம்.

புதுகோட்டையை சேர்ந்த பயணி இழுத்து வந்த பையை சோதனையிட்டபோது அடிப் பகுதியில் ஏதோ பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அட்டையால் மறைக்கப்பட்ட அடிப் பகுதியை கிழித்துப் பார்த்தபோது தங்கக் கட்டிகள், பணம் இருந்தது தெரியவந்தது.

பிடிபட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பொறியியல் பட்டதாரி என்பதும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இலங்கை, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்ததும் தெரியவந்தது.

கடந்த ஓராண்டில் மட்டும் 12.4 கிலோ தங்கத்தை கோவை விமான நிலைய சோதனையின்போது பறிமுதல் செய்துள்ளோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்