ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை விவரம்:
மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்ட கிராமங்களில், ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித் தது.
சாதி, மத வேறுபாடின்றி, தமிழர் பாரம்பரியத்தின் வெளிப் பாடாக நடத்தப்படும் வீர விளை யாட்டுகளில் ஒன்றான ஜல்லிக் கட்டுக்கு தடை விதித்திருப்பது மக்களின் உணர்வுகளை காயப் படுத்தும். ஜல்லிக்கட்டால் ஏற்படும் உயிர்ச் சேதம் மற்றும் அபாயகரமான விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர, நிர்பந்தித்து தடுப்பது எதிர்மறை விளைவுகளையே உருவாக்கும். எனவே, ஜல்லிக்கட்டு மீதான உச்ச நீதிமன்றத் தடையை நீக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago